தமிழக அரசு நடத்தும் இலவச பயிற்சி | TNPSC Free Online Coaching By Government 2022 | Tamil Brains
வேலைவாய்ப்பு பயிற்சி துறை சென்னை – 600032 கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தற்போது SSC (Graduate level) தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் இணையவழியாக நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து TNPSC – Group ), TNPSC – Group || தேர்விற்கான ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் ஜனவரி 10ஆம் தேதி நேரடி மற்றும் இணைய வழியாக துவங்கப்படவுள்ளன.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது விவரங்களை கீழ்காணும் Google form இணைப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
:
- For TNPSC – Group – 1 & 2,
https://forms.gle/2cqJivv8JiLxXphe7
- For ssc (Graduate level) Registration link:
https://forms.gle/2EsNxbGNGXdgQxdg6
Also Read – Latest Govt Jobs
இவ்வகுப்புகள் அனைத்தும், திறமை வாய்ந்த மற்றும் போட்டித் தேர்வுகளில் ஏற்கனவே வெற்றி பெற்ற வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள், மாதிரி நேர்காணல்கள் உள்ளிட்ட அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் திரு.K.வீரராகவ ராவ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதன்மை செயல் அலுவலர் மற்றும் இயக்குநர்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை
கிண்டி, சென்னை